Terms & Conditions
Fully Airconditioned Mahal
ஒரு நாள் மஹால் வாடகை: ரூ 1,10,000/- (+18% GST வரி தனி)
ஒரு நாள் A/C தங்கும் அறை – ரூ. 2500/- (+18% GST வரி தனி)
மஹால் வாடகைக்குள் உட்பட்ட வசதிகள்
- அரங்கம் மற்றும் நாற்காலிகள், பார்கிங் வசதி, போர் தண்ணீர் , நவீன கழிப்பறைகள்.
- மணமகன், மணமகள் குளிரூட்டப்பட்ட தங்கும் அறைகள்
- உணவுக்கூடம், மேஜைகள், நாற்காலிகள், சமையல் கூடம் மற்றும் சமையல் பாத்திரங்கள்
ஒரு நாள் என்பது விழாவிற்கு முதல் நாள் மாலை 4:00 மணி முதல் மறு நாள் மாலை 3:00 மணி வரைமட்டுமே.
மஹால் வாடகை கட்டணத்தை முழுமையாக செலுத்திய பின்னரே புக்கிங் செய்யப்படும்.
இதர கட்டணங்கள்
- A/C ஜெனரேட்டர் இயக்க ஒரு மணி நேரத்திற்கு- ரூ. 6000/-
- பொது ஜெனரேட்டர் இயக்க ஒரு மணி நேரத்திற்கு – ரூ. 7000/- (மின் தடையின் போது மட்டும்)
- கரண்ட ஒரு யூனிட்க்கு – ரூ 20/-
- கேஸ் 1 கிலோவிற்கு – ரூ. 160/-
- மஹால் கிளீனிங் சார்ஜ் – சைவம் ரூ 12000/-, அசைவம் ரூ 15,000/-
- செக்யூரிட்டி சர்வீஸ் ஒரு நபருக்கு ரூ.750/- (இரண்டு நபர்கள் இருப்பார்கள்)
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளுக்கான கட்டணமாக ரூ. 60,000/- வைப்பு தொகையாக விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு செலுத்த வேண்டும்.
விழா முடிந்த பின் உபயோக கட்டணம் போக மீதம் திரும்ப செலுத்தப்படும்.
திருமண நிகழ்ச்சி எனில் மணமகன் – 21 வயது, மணமகள் – 18 வயது பூர்த்தி செய்ததற்கான சான்றிதல் திருமண அழைப்பிதழ் மற்றும் – ID Proof ஐ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
** மங்கள இசை, அலங்காரம், ஒளி & ஒலி அமைப்பு – தனி கட்டணம்
* *விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பக்கம் உள்ளது
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- நிகழ்ச்சிக்காக புக்கிங் செய்தவர்கள் மஹாலின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
- விழாக்களுக்கு முன்பதிவு செய்துவிட்டு பின் ரத்து செய்ய இயலாது. அவ்வாறு தாங்கள் ரத்து செய்ய விரும்பினால், தாங்கள் முன்பதிவு செய்த தேதியில் வேறு யாரேனும் முன்பதிவு செய்தால் மட்டுமே பணம் திரும்ப செலுத்தப்படும்.
- தேதியில் முன் பதிவு இல்லாத பட்சத்தில் பதிவு செய்த தேதியை ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
- நிகழ்ச்சியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மஹாலையும், மின்சார அளவு, கேஸ் அளவு, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சரிபார்த்து நல்ல முறையில் பெற்று, விழா முடிந்த பின் நல்ல முறையில் திரும்ப ஒப்படைக்க வேண்டியது நிகழ்ச்சிக்கு ஒப்புகொண்டவரின் பொறுப்பாகும்.
- சமையல் கேஸ், கரண்ட் யூனிட், ஜெனரேட்டர் கட்டணம் அன்றைய நிலவரப்படி மாறுதலுக்கு உட்பட்டவை.
- சமைப்பதற்கு, குடிப்பதற்கு தேவையான தண்ணீரை தாங்களே சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
- மட்டன் விறகு அடுப்பு மஹாலின் பின்புறம் வைத்து கொள்ளவும். ஆனால் மஹாலில் இறைச்சி வெட்ட அனுமதி இல்லை.
- வெளி சமையல் கேஸ்களுக்கு அனுமதி இல்லை. எக்காரணத்தை கொண்டும் சமையல் கூடத்தை விட்டு வெளியில் சமைக்க கூடாது.
- உணவு, ஐஸ்கிரீம், காபி, டீ, மற்றும் இதர உணவு பொருட்களை சாப்பிட டைனிங் ஹாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களை உபயோகப்படுத்த கூடாது.
- மஹாலின் சமையல் பாத்திரங்கள் மற்றும் எந்தவொரு பொருட்களையும் வெளியே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- மளிகை சாமான்கள் வைக்கும் அறை, மணமகன் அறை, மணமகள் அறை மற்றும் (பிற அறைகள் வாடகைக்கு எடுப்பின்) அவற்றினை தாங்களே தங்கள் பூட்டினை கொண்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
- தங்களுடைய உடமை யாவும் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தவறும் பொருட்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
- பிளக்ஸ், பேனர் வைப்பதற்கு மாநகராட்சி, காவல்துறை அனுமதி பெற வேண்டும்.
- மஹாலின் உள்ளே, வெளியே பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
- மஹாலில் மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும்.
- மஹால் சுவற்றில் உள்ளேயும், வெளியேயும் போஸ்டர்கள் ஒட்ட கூடாது.
- மஹாலில் சமையல் பாத்திரங்கள் தொலைந்தாலோ அல்லது பிற பொருட்களுக்கு ஏற்பட்டாலோ கிரையம் வசூலிக்கப்படும்.
- மண்டபத்தில் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் சுத்தம் செய்து தருவது நிகழ்ச்சியாளர் பொறுப்பு.
- சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு செயலும் மண்டபத்திற்குள் செய்ய கூடாது.
- மண்டபத்தில் அணைத்து இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள், நிபந்தனைகள், மற்றும் கட்டணம் நன்றாக அறிந்து, ஒத்துழைப்பு தந்து விழாவினை சிறப்பாக நடத்த எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியப்படுத்தி கொள்கிறோம்.